Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

இந்தியன் வங்கியில் பணியாற்றும் பெண்ணுக்கு துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம்

இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றும் பூஜா அகர்வால் துப்பாக்கி சுடுதல் உலகப் கோப்பை போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இதுகுறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பூஜா அகர்வால் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஊனமடைந்தார். பின்னர் அதிலிருந்து மீண்ட அவர் 2014-ல் இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். 2016-ம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற தொடங்கினார்.

2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகள் துப்பாக்கி சுடுதல் உலகப் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வென்று முதலாவது சர்வதேச பதக்கத்தை வென்றார். அதே ஆண்டில் நடந்த 61-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தற்போது பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பூஜா கூறும்போது, “உங்கள் கனவுகளை நோக்கிச் செல்வதில் நீங்கள் உறுதியாக இருந்தால் வானமே எல்லையாக இருக்கும் என்பதை நான் மிகவும் நம்புகிறேன்.

2021 பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்று, இந்தியன் வங்கிக்குப் பாராட்டுகளை வாங்கித் தரவும், நாடு முழுவதும் உள்ள சிறப்புத் திறனாளிகளுக்கு ஊக்கமூட்டவும் ஆசைப்படுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x