

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியில் இருந்து 75 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். அங்குள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண் களுக்கும், வீரபாண்டிய பட்டணம் கருணாலயா மூளை முடக்குவாதம் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அடைக்கலாபுரத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வளரும் குழந்தைகளை பார்வை யிட்டார்.