

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெரியகுளம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, தடையற்ற பாசனத் துக்கு ஏற்பாடு செய்வதுடன், படகுக் குழாம் அமைத்து சுற்றுலா தலமாகவும் மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
திருவெறும்பூர்- கூத்தைப்பார் இடையே உள்ள பெரியகுளம் ஏரி ஏறத்தாழ 270 ஏக்கர் பரப் பளவு கொண்டது. இந்த ஏரிக்கு உய்யக்கொண்டான் ஆற்றிலி ருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஏரியிலிருந்து திருவெறும் பூர், கூத்தைப்பார், வேங்கூர், நடராஜபுரம், தேன்கூடு, முடுக்கூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இங்கு விவசாயிகள் நெல், உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஏரி தற்போது தூர்ந்து சுமார் 5 அடி ஆழமே உள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர் தேக்க முடியாமல் ஆண்டில் 7 மாதங்களுக்கு வறண்டே கிடக் கிறது. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றிய பொருளாளர் த.சங்கிலி முத்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
இந்த ஏரியில் பல ஆண்டுக ளாக பராமரிப்புப் பணிகள் நடைபெறாததால் தூர்ந்து போய் உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்த நிலைமாறி தற் போது 4 முதல் 5 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் குளத்தில் இருக் கிறது. இதனால், இங்கிருந்து பாசனம் பெறும் வயல்கள் பெரும் பாலும் தரிசாகவே உள்ளன.
எனவே, இந்த ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும். வரத்து வாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதி களிலிருந்து கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஏரியில் மண்டியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும். ஏரியின் தென்புறத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்றார்.
படகுக் குழாம் அமைக்கலாம்
சமூக ஆர்வலர் திருவெறும்பூர் கோ. சண்முகவேல் கூறியது: இந்த பெரியகுளத்தை முழுமையாக தூர்வாரி, சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்தால், உள்ளூர் மட்டுமன்றி, வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கும் பொழுது போக்கும் நல்ல இடமாக இது இருக்கும். தண்ணீர் இருக்கும் போது அதிக அளவில் பறவை கள் வருவதால் பறவைகள் சரணா லயமாகக் கூட மாற்றலாம்.
தற்போது அமைந்துள்ள புதிய அரசும், அமைச்சராக பொறுப் பேற்றுள்ள திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஸ் பொய்யா மொழியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.