Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு உடனே அமைப்பு: குழு ஒருங்கிணைப்பாளராக நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம்

சென்னை

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு அதற்கான ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ­

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் உரையாற்றினார். அந்தஉரையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது.இந்த போக்கை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். சிலஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் மனிதவளத்தின் பலன்களை முழுமையாக பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்தவளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்து, அரசுக்குஆலோசனை வழங்க, ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க அரசுமுடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ்வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின்முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதித் துறை செயலர் எஸ்.நாராயண்ஆகிய பொருளாதார அறிஞர்கள்இக்குழுவில் உறுப்பினர்களாகஇருப்பார்கள்’’ என்றார்.

நேற்று முன்தினமே இதற்கானஅரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘குழுவுக்கான செயலகமாக தமிழக அரசின் நிதித் துறைசெயல்படும். குழு ஒருங்கிணைப்பாளராக நிதித் துறை செயலர்ச.கிருஷ்ணன் செயல்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் பணிகள்

இந்த குழுவானது பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் குறிப்பாக பெண்களுக்கான சம வாய்ப்பு, பின்தங்கிய மக்களின் நலன் தொடர்பான தங்களது பொதுவான பரிந்துரைகளை வழங்கும். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாநிலஉற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை அளிக்கும்.

முதல்வர் அல்லது நிதியமைச்சருக்கு பொருளாதாரம் மற்றும் சமுதாய கொள்கை தொடர்பானவிஷயங்களில் உதவி தேவைப்பட்டால், அதை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிவுரைகளை குழு வழங்கும்.

குழு அல்லது குழு உறுப்பினர்கள் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவோ தேவைப்படும் போது சந்திப்பார்கள். குழு தனது இலக்கை அடைய தனது சொந்த செயல்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல்வர் அல்லது அரசுக்கு தேவைப்படும் உடனடி ஆலோசனைகளை வழங்க குழு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x