கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது வாங்க கேரளாவுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்

கோவை வாளையார் சோதனைச்சாவடி அருகே நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றிலிருந்து பறிமுதல் செய்த கேரள மாநில மதுபான பாட்டில்கள். படம்: ஜெ.மனோகரன்
கோவை வாளையார் சோதனைச்சாவடி அருகே நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றிலிருந்து பறிமுதல் செய்த கேரள மாநில மதுபான பாட்டில்கள். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாததால், மதுப்பிரியர்கள், வாகனங்கள் மூலம் கேரளாவுக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலையின் பரவல்குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட் டன. அதில், தொற்றுபரவல் அதிகளவில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மேலும், கடந்த நான்குநாட்களுக்கு முன்னர், கோவைக்கு அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரைஅங்கு மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்ல வாளையார், வேலந்தாவளம், நடுப்புணி, வீரப்பனூர், மீனாட்சிபுரம், வலந்தாயமரம், ஆனைகட்டி ஆகிய வழித்தடங்கள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு, கோவையைச் சேர்ந்த மதுப்பிரியர்கள், வாகனங்கள் மூலம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்துக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர்.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது,‘‘வாளையார் சோதனைச்சாவ டியை கடந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் பாலக்காட்டுக்குள் சென்றால் மதுக்கடைகள் உள்ளன. அதேபோல், வேலந்தாவளத்தில் இருந்து பாலக்காட்டின் மேனாம் பாறைக்குள் நுழைந்தால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளேயே மதுக்கடைகள் உள்ளன.

இதனால், மதுப்பிரியர்கள் கோவையில் இருந்துகேரளாவுக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்குகின்றனர். சோதனைச்சாவடிகளுக்கு அருகேயுள்ள ஒற்றையடி பாதை, குறுக்குப்பாதைகள் வழியாக காவல் துறையினரை ஏமாற்றிவிட்டு, கேரளாவுக்குள் நுழைந்து விடுகின்றனர். அங்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அதே வழியில்திரும்பி விடுகின்றனர்.

கேரளாவுக்குள் நுழைய இ-பாஸ் தேவை என்பதால், அதையும் பதிவு செய்து கொள்கின்றனர். கரோனா தொற்று பரவலின் அச்சத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

காவல்துறையினர் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் கேரளாவை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறிமதுபாட்டில்களுடன் பிடிபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது’’ என்றனர்.

இதுதொடர்பாக பேரூர் உட்கோட்ட டிஎஸ்பி திருமால் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘வாளையார், வேலந்தாவளம் சோதனைச்சாவடி களில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு இடங்களில் 22-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர். மதுபாட்டில்களுடன் பிடிபடும் நபர்கள் மீது வழக்குபதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதிக பாட்டில்கள் இருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in