Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

கோயில்கள் திறப்பு, திருவிழாக்களை எதிர்நோக்கி கலைக்கூடத்தில் காத்திருக்கும் ‘கிராம தெய்வங்கள்’ - ஊரடங்கால் பாதிப்பு என, சிற்ப கலைஞர்கள் உருக்கம்

மண்பாண்ட தொழிலாளர்கள் உருவாக்கிய கிராம தெய்வ சிற்பங்கள், கோயில்களில் திருவிழாக்கள் இல்லை என்பதால் கலைக்கூடத்தில் தேங்கியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் காருகுறிச்சி, கூனியூர் பகுதி களில் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்களை உருவாக்கும் தொழி லில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு ள்ளனர். இவர்களுக்காக மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இங்கு உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் உள்ளூர் மட்டுமின்றி கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப் பட்டு விற்பனை செய்யப்படும்.

கரோனா தொற்று பரவலுக்குப் பின் கடந்த ஆண்டு அமலுக்கு வந்த ஊரடங்கின்போதும், தற்போதைய ஊரடங்கின்போதும் சரக்கு வாகன போக்குவரத்து தடைபட்டதாலும், மண்பாண்டங்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வராத தாலும் மண்பாண்டங்களும், சுடுமண் சிற்பங்களும் தேக்க மடைந்தன. பல லட்சம் மதிப்புள்ள மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் தேங்கியிருப் பதாக மண்பாண்ட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

வழிபாடு இல்லை

இது தொடர்பாக கூனியூர் பகுதியிலுள்ள சுடுமண் பொம்மை கள் மற்றும் மண் சிற்ப கலைக் கூடத்தில் பணியாற்றும் கலைஞர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: இத் தொழிலை நம்பி காருகுறிச்சி, கூனியூர் பகுதிகளில் மட்டும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் உள்ளன.

கரோனாவால் கடைகள் திறக்கப்படவில்லை. வெளியூர்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியவில்லை. கோயில்களிலும் வழிபாடு இல்லை என்பதால், அங்கு நடைபெறும் வைபவங்களில் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட இசக்கியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களின் சுதைகள் தேங்கிவிட்டன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியருக்கான உண்டியல்கள் உருவாக்கும் பணிகளும் முடங்கிவிட்டன. மண்பாண்ட ங்களும், சுடுமண் சிற்பங்களும் தேக்கமடைந்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொழிற்கூடங்களுக்கு வந்து மீண்டும் பணிகளை தொடங்கியிருக் கிறோம். ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு வாகனங் கள் இயக்கப்பட்டு, கோயில்கள், கடைகள் முழுஅளவில் திறக்கப்பட்டால் மண்பாண்டங்கள் மற்றும் சுடுமண் சிற்பங்கள் விற்பனை தொடங்கும் என்று நம்பியிருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x