

தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பி னர் பார்த்தசாரதி, செல்போன் மூல மாக தனக்கு கொலை மிரட்டல் விடுத் ததாக காவல் நிலையத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலை வர் தமிழருவி மணியன் புகார் அளித் துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறும்போது, சென் னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பும், மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் டாஸ்மாக் கடை கள் முன்பும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க. பங்கேற்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தினால், அந்த ஆர்ப்பாட்டமே அர்த்தமற்றதாகிவிடும் என்றார்.
இதையடுத்து தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி, செல்போன் மூலமாக தமிழருவி மணி யனை தொடர்பு கொண்டு தரக்குறை வாக பேசியதுடன், கொலை மிரட்ட லும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழருவி மணி யன் கூறுகையில், திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது, தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்த சாரதி என்னை தொடர்பு கொண்டு தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசினார். விஜயகாந்தை அவமானப் படுத்தி இருக்கிறாய். தமிழகத்தில் எங்கே இருந்தாலும் கை, கால்கள் முறிக்கப்படும் எனக் கொலை மிரட் டல் விடுத்தார். முதல் முறையாக எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் ஜெயச்சந்திரனிடம் தமிழ ருவி மணியன் சனிக்கிழமை இரவு புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரிப் பதாக மாநகரக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகோ கடும் கண்டனம்
தமிழருவி மணியனை தேமு திக எம்எல்ஏ பார்த்தசாரதி மிரட் டிய சம்பவம், தமிழகத்தில் அமைதி யான பொது வாழ்வுக்கு கேடு விளை விப்பதாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அவிநாசியில் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், பத்திரிகையாளர் சந்திப்பின் போது மதுவிலக்கு குறித்து கருத்து தெரிவித்தது அவரது ஜன நாயக உரிமை ஆகும். ஒழுக்கமும் வாய்மையும் அறம் சார்ந்த நற்பண்பு களும் உடைய தமிழருவி மணியன், தூய்மையான எளிய வாழ்வை மேற்கொண்டு, தமிழகத்தின் உயர்வுக் காக போராடி வரும் தலைவர்.
ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம்தான் அடிப்படை நெறி. ஆனால், தேமுதிக எம்எல்ஏ பார்த்த சாரதி, தொலைபேசியில் தமிழ ருவி மணியனிடம் தரக்குறைவான சொற்களால் ஒருமையில் பேசியுள் ளார்.
கை, கால் உடைக்கப்படும் என் றும், தமிழகத்தில் எங்கும் தலைகாட்ட விடமாட்டோம் என்றும் மிரட்டிய செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. இத்தகைய போக்கு தமிழகத்தின் அமைதியான பொது வாழ்வுக்கு கேடு விளைவிப்பதாகும். எனவே, பார்த்தசாரதியின் வன்முறை மிரட் டலுக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.