

கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அமைச்சர் கே.என்.நேருவுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் கிடப்பில் இருந்தால் அதை உடனடியாக முடிக்கும்படியும் அறிவுறுத்தி இருக்கிறாராம் முதல்வர். அநேகமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடும் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்