நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் வரப்பெற்றன: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் வரப்பெற்றன: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்
Updated on
1 min read

நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்துஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. நீட் தேர்வு பாதிப்புகுறித்து மக்கள் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்றுகுழு கடந்த வாரம் அறிவித்தது.

இதுகுறித்து குழுத் தலைவர் ஏ.கே.ராஜன் கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமான தரவுகள் பொதுமக்களிடம் இருந்துவந்துள்ளன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளில் நீட்தேர்வு வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் இருவேறு கருத்துகள் கலந்தே வைக்கப்பட்டுள்ளன.

அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் மட்டுமே அரசு வழங்கியுள்ளது. குறிப்பிட்ட அவகாசத்தில் பணி முடியாவிட்டால், அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்படும். மக்களின் கருத்தை வைத்துத்தான் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இதனால், குழு உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in