

அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என்று தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
வரியைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அதை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலையாகும். மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும்போது, தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா?
எரிபொருளின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வராமல், விலைவாசியை எப்படிக் குறைக்க முடியும்? எனவே, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.