4 மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு: உற்பத்தியாளர்கள் தகவல்

4 மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு: உற்பத்தியாளர்கள் தகவல்
Updated on
1 min read

மழை, வெள்ளம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தொழிற்பேட்டை உற்பத்தி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் கே.வி.கனகாம்பரம், முன்னாள் தலைவர் வி.எஸ்.நரசிம்மன், ஆலோசகர் ஏ.சண்முக வேலாயுதன் ஆகியோர் சென்னை யில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

அண்மையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகளுக் குள் தண்ணீர் புகுந்ததால் இயந் திரங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இயந்திரங்கள் சேதத்தால் ரூ.2 ஆயிரம் கோடி, உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், மென்பொருட்கள் சேதத்தால் ரூ.10 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சிறு, குறு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும் விற்பனை வரியை 5 ஆண்டுகளுக்கு பிறகு செலுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். வெள்ளத்தால் முற்றிலும் சேதம் அடைந்த சிறு, குறு நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதாக கருதி அந்நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து கடன் வழங்குவதற்காக மாநில அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், சங்க பிரதிநிதி களைக் கொண்ட முத்தரப்பு குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in