

சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலையில், இலவச பாடப்புத்தகங்களை சுமந்து லாரியில் ஏற்றும் பணியில் வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலராகப் பணிபுரிபவர் கீதா. நடப்பு கல்வி ஆண்டுக்கான 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு வந்தது.
அதை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வேடசந்தூர், குஜிலி யம்பாறை, வடமதுரை, ரெட் டியார்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலு வலகங்களுக்கு பிரித்து அனுப்ப லாரி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாடப்புத்தகங் களை லாரியில் ஏற்றுவதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வரவில்லை.
இதையறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர்களுடன் இணைந்து பாடப்புத்தகங்களை லாரியில் ஏற்றும் பணியை மேற்கொண்டார்.
பாடப்புத்தகங்களை லாரியில் ஏற்றும் பணியை தயக்கமின்றி மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் கீதாவின் செயலை அனைவரும் பாராட்டினர்.