

தமிழகம், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங் களில் ஆர்எஸ்எஸ் சேவாபாரதி சார்பில் 900 பெண்கள் உட்பட 4 ஆயிரம் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக் கப்பட்ட மக்களுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட் கள் வழங்கப்பட்டுள்ளன என்று சேவாபாரதி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் சேவாபாரதி மாநில ஒருங்கிணைப் பாளர் ராம.ராஜசேகர், பத்மகுமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கடந்த நவம்பர் 9-ம் தேதியே நிவாரணப் பணிகளை தொடங்கினர். முதலில் உணவுப் பொட்டலங்கள், பாய், போர்வை, பால் போன்றவற்றை விநியோகித்தோம்.
டிசம்பர் 1-ம் தேதி இரவில் இருந்து முழுவீச்சில் பணிகளை தொடங்கினோம். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 900 பெண்கள் உட்பட 4 ஆயிரம் தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து 100 பேர் வந்திருந்தனர். மொத்தம் 110 மையங்கள் செயல்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் நேரடியாகவும், படகுகள் மூலமாகவும் 1,350 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தோம். சென்னையில் மட்டும் இதுவரை 21 லட்சம் உண வுப் பொட்டலங்களை விநியோ கித்துள்ளோம். கோவை, திருப்பூர், பெங்களூருவில் இருந்து வந்த 12 லட்சம் சப்பாத்திகள் விநியோகிக் கப்பட்டுள்ளன. இதுவரை 63 ஆயி ரம் பேருக்கு பாய், போர்வை, பாத் திரங்கள், மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ.8 கோடி மதிப்பி லான நிவாரணப் பொருட்கள் வழங் கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் 1.50 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ.18 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
133 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 160 டாக்டர் கள் பங்கேற்றனர். 23 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவிகள் செய் யப்பட்டன. பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்ட னர். கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மட்டுமின்றி மகாராஷ்டிரம், டெல்லி, ஹரியாணா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி யிருந்தனர்.
ஐயப்ப பக்தர்களுக்கு உதவி
சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற முகாமில் 400-க்கும் அதிகமான இருசக்கர வாக னங்களை இலவசமாக பழுதுபார்த்து கொடுத்துள்ளோம். தமிழகத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவத் தினருக்கு விஜய் திவஸ் நாளான 16-ம் தேதி (நாளை) புரசைவாக்கம் அழகப்பா பள்ளியில் பாராட்டு விழா நடத்த உள்ளோம். அடுத்தகட்டமாக குடிசைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஐயப்ப பக்தர்களுக்கு போர்வை, வேஷ்டி, இருமுடி பொருட்களை வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.