

தமிழகத்தில் வெள்ளப் பகுதிகளில் இருந்து ஒரே நாளில் 69 ஆயிரத்து 439 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 லட்சத்து 64 ஆயிரத்து 4 பேர் மீட்கப்பட்டு 6 ஆயிரத்து 605 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை 1 கோடியே 22 லட்சத்து 61 ஆயிரத்து 163 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
26 ஆயிரத்து 217 மருத்துவ முகாம்கள் மூலம் 25 லட்சத்து 65 ஆயிரத்து 25 பேர் பயன் பெற்றுள்ளனர். 4 ஆயிரத்து 768 கால்நடைமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 10 லட்சத்து 36 ஆயிரத்து 117 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பாதிப்படைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் 2ஆயிரத்து 900 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நிலவரப்படி தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 16 லட்சத்து 97 ஆயிரத்து 565 பெர் மீட்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் கூடுதலாக 69 ஆயிரத்து 439 பேர் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.