Published : 26 Dec 2015 10:40 AM
Last Updated : 26 Dec 2015 10:40 AM

காஞ்சி, திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் விழா: மழை பாதிப்பால் வழக்கமான உற்சாகம் இல்லை

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் விழாவில் வழக்கமான உற்சாகம் காணப்பட வில்லை.

திருவள்ளூர் மாவட்டம் திரு வள்ளூர், பூந்தமல்லி, பழவேற் காடு, பூண்டி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையிலான குடில்கள், வீடுக ளையும் தேவாலயங்களையும் அலங்கரித்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த் தனைகள் நடைபெற்றன. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.

மழை பாதிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் விழா எளிமையாக கொண்டாடப்படும் என கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ள பழவேற்காடு பகுதியில் வழக்க மான உற்சாகம் காணப்ப டவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டோருக்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. அத்திப்பட்டு, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரண உதவிகளும் வழங்கப் பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம்

செங்கல்பட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளி ரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அன்ன தானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண் டனர். அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள மலை மாதா தேவா லயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் இலவச உடைகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x