

கனமழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் மற்றும் தோட் டக்கலை துறைகளுக்கு முதல் கட்டமாக ரூ.16.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹெக்டேருக்கு ரூ.13,500 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிவாரணமாக வங்கி கணக்கில் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், மாவட் டத்தில் உள்ள ஏரி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேத மடைந்தன. தற்போது, உதவி வேளாண் துறை அலுவலர், வரு வாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் அந்தந்த பகுதிகளில் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பில் முதல் கட்டமாக மாவட்டத்தில் 12,060 ஹெக்டேர் நெற்பயிர், 27 ஹெக்டேர் மணிலா, 12 ஹெக்டேர் பயிறுவகைகள் மற்றும் 132 ஹெக்டேர் கரும்பு என மொத்தம் 12,231 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு வேளாண் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சேத மடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க முதற் கட்டமாக ரூ.16.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹெக்டேர் நெற்பயிர்களுக்கு ரூ.13,500, மணிலா மற்றும் பயிறு வகைகள் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410, கரும்பு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தோட்டக்கலைத் துறை
தோட்டக் கலைத் துறை சார்பில் நடந்த கணக்கெடுப்பில், மாவட்டம் முழுவதும் 629 ஹெக் டேர் காய்கறிகள் மற்றும் 4 ஹெக் டேர் பழவகை மரங்கள் என மொத்தம் 633 ஹெக்டேர் சேத மடைந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் சீதாராமன் கூறிய தாவது: முதற்கட்ட கணக்கீட்டின் படி ரூ.16.48 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை அனைத்தும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கணக்கு மூலம் மட்டுமே வழங்கப்படும்.
வங்கி கணக்கு இல்லாதவர்க ளுக்கு, புதிதாக வங்கி கணக்கு ஏற்படுத்தி, அதில் நிவாரண தொகை வழங்கப்படும். வங்கி யில் விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்காக நிவாரண தொகையில் பிடித்தம் செய்யப் பட மாட்டாது.
தற்போது 2-ம் கட்டமாக 10,271 ஹெக்டேர் நெற்பயிர், 12,444 ஹெக்டேர் கரும்பு, 10 ஹெக் டேர் பயிறு வகைகள், 257 ஹெக் டேர் மணிலா என மொத்தம் 22,982 ஹெக்டேர் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கோல்டி பிரே மாவதி கூறியதாவது: தோட்டக் கலைத்துறை கணக்கெடுப்பில் சேதமடைந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ள 633 ஹெக் டேர் காய்கறி மற்றும் பழவகை மரங்களுக்கு முதற்கட்டமாக ரூ.43 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காய்கறி வகைகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 மற்றும் பழவகை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் நேரு கூறியதாவது: மழை யில் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், இரண்டரை ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு வங்கியில் கடனாக ரூ.22,500 பெற்றுள்ள நிலையில், அரசு அறிவித்துள்ள நிவாரணம் விவ சாயிகளை கடும் துயரத்தில் ஆழ்த் தியுள்ளது. அதனால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், விவ சாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.