Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

சிறுபான்மை மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை பாஜக வழங்கும்: சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் உறுதி

பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலர் சையத் இப்ராஹிம் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்.

புதுச்சேரி

சிறுபான்மை மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை பாஜகவழங்கும் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலர் சையத் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலர் சையத் இப்ராஹிம் நேற்று புதுச்சேரி வந்தார். பாஜக சிறுபான்மை அணி மாநில நிர்வாகிகளிடம் புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் தமிழிசை, பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் சையது இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க பல வியூகங்களை வகுத்துள்ளோம். மத்திய அரசு சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. முத்தலாக், சிஏஏ போன்ற சட்டங்களின் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் மக்கள் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு களாக காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கு எந்த நலனும் செய்யவில்லை. அவர்களை பின்னடைவு செய்துள்ளனர். வக்பு போர்டு நிர்வாகிகளை நியமிக்கவில்லை. அதுமட்டுமல்லாது ஹஜ் கமிட்டி யின் நலத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. இஸ்லாமியர்க ளின் வக்பு வாரியத்தை முறையாக பராமரிக்கவில்லை. வக்பு சொத்துக்களை காங்கிரஸ் - திமுக அமைச்சரவையில் இருந்தவர்கள் கொள்ளையடித்துள்ளனர். புதிதாக அமைந்துள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு வக்பு சொத்தை மீட்டு, பறிமுதல் செய் யும். பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து காங்கிரஸ் கூறி வருகிறது. ஆனால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாக காங்கிரஸ் செயல்பட்டு வந்துள்ளது.

ஆர்எஸ்எஸ்-ஐ கடுமையாக எதிர்த்த திமுக தற்போது ஆர்எஸ்எஸ் மக்களுக்கான இயக்கம் என கூறியுள்ளது. இதனை பாஜக வரவேற்கிறது. இந்துத்துவா சித்தாந்தத்தை அனைவருக்கும் புரிய வைப்பதுதான் எங்களது தலையாய பணி.

புதுவையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏ ஜான் குமாருக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்கவில்லை என ஆதர வாளர்கள் கொந்தளித்துள்ளனர். இதற்கும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன அவரே கூறியுள்ளார். அமைச் சரவையில் பொறுப்பு இல்லை என்றால் அவருக்கான வேறு பொறுப்பு கண்டிப்பாக கொடுக்க முடியும். சிறுபான்மை மக்களுக்கு சரியான பிரதிநித்துவத்தை பாஜக வழங்கும்.

ஹஜ் புனித பயணத்தை ரத்து செய்திருப்பது மத்திய அரசு அல்ல. சவுதி அரேபியா நாடு ஹஜ் பயணத்தை அனுமதிக்கவில்லை. இதனால் தான் ஹஜ் பயணம் தடைபட்டுள்ளது. இறைவனின் அனுகூலம் இருந்தால் அடுத்த ஆண்டு மத்திய அரசின் ஒத்துழைப்போடு ஹஜ் பயணம் செல்ல முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மை நிர்வாகி களுக்கு அதிக வாய்ப்பை பாஜக கொடுக்கும் என்று குறிப் பிட்டார்.

பேட்டியின்போது புதுச்சேரி சிறுபான்மையினர் தலைவர் விக்டர் விஜயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x