

கரோனா தொற்று குறைந்ததும் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் ரூ. 4,000 உதவித் தொகை, அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பரமக்குடியில் நடைபெற்றது. இதில் உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை 198 பேருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, தமிழகத்தில் ஊதியமின்றி பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள், ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கரோனா தொற்று குறைந்ததும் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசன், முன் னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சுந்தரராஜ், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் சிவலிங்கம் கலந்துகொண்டனர்.