

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசி யல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு ஏற்ப நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறந்து, அரசு அறிவித் துள்ள விலைக்கு ஏற்ப நெல் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகத் துக்கு சொந்தமாக இடங்கள் இல்லாததால், அந்தந்த ஊர்களில் கட்டணம் வசூலிக்காமல் தேர்வு செய்து தரப்படும் இடத்தில் கொள் முதல் நிலையம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.
ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைக்கும் இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படுகின்றன.
அதன்படி, கடந்த 10 ஆண்டு களில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் தேர்வு செய்த இடங்களில்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல் பட்டு வந்துள்ளன.
தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கொள்முதல் நிலையம் செயல் படும் இடத்தை மாற்ற வேண்டும் என திமுகவினரும், ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் தான் அவை செயல்பட வேண்டும் என அதிமுக வினரும் மோதிக் கொள்வதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட் டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்துக்கு இதுவரை 90 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அம்புக்கோவில், இலைகடி விடுதி, கீராத்தூர், ராங்கியன்விடுதி உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங் களில் அதிமுகவைச் சேர்ந்த வர்கள் ஏற்கெனவே உள்ள இடத் தையும், திமுகவினர் வேறொரு இடத்தையும் தேர்வு செய்துள் ளதால், இந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப் பதில் சிக்கல் நீடிக்கிறது. திறக் கப்பட்ட இடங்களிலும் பெரும் பாலான இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொள் முதல் பணியில் தேக்கம் ஏற்பட் டுள்ளது.
ஆளுங்கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் விடாப்பிடியாக இருப்பதால் அரசு அலுவலர்களும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப் படாததால் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, பொது இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.