Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டப்பேரவை நாளை கூடுகிறது

சென்னை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவு வெளியான நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட் சியை பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மரபுப்படி ஆளுநர் உரையுடன் நாளை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது.

இதற்காக, சமீபத்தில் ஆளுநரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவும் நேரில் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆளுநர் அனுமதியளித்ததை தொடர்ந்து கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முன்ன தாக பேரவைக்குள் வரும் அனைவருக் கும் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு நெகட்டிவ் என முடிவுகள் வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவர். அதற்கான பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை பேரவைத் தலைவர் வாசிப்பார். அத் துடன் பேரவை அலுவல்கள் முடித்துக் கொள்ளப்படும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

ஆளுநர் உரையை பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில இடம் பெறலாம் என தெரிகிறது. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ரத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு, மேகேதாட்டு அணை விவகாரம், அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை குறித்த கருத்துகளையும் ஆளுநர் தெரிவிப் பார் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவ ராக பழனிசாமி, துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வாகி முதல் முறையாக எதிர்க்கட்சி வரிசை யில் அமர்கின்றனர். இந்தச் சூழலில், முந்தைய அதிமுக அரசின் மீதெழும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டு களுக்கும் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரைத் தொடர்ந்து விரைவில் திமுக அரசின் இந்த நிதியாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x