‘பப்ஜி’ மதனால் பாதிக்கப்பட்டோர் புகார் கொடுக்கலாம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்ட பப்ஜி மதன்.படம் க.பரத்
சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்ட பப்ஜி மதன்.படம் க.பரத்
Updated on
1 min read

‘பப்ஜி’ மதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

‘பப்ஜி’ விளையாட்டின்போது ஆபாசமாக பேசியதாக மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாஆகியோரை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் பே மூலமாக மதன் பலரிடம் பணம் பெற்றிருக்கிறார். யூ-டியூப் சேனல்கள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த மதன், அதற்கு வருமான வரி கட்டவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆடி கார், ரூ.4 கோடி பணம்

மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.4 கோடி உள்ளது. தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரூ.45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ என 2 சொகுசு கார்கள், பல லட்ச ரூபாய் மதிப்பில் தங்க, வைர நகைகள் மதனிடம் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வருமான வரி ஏய்ப்பு

இந்த சொத்துகளுக்கு மதன் வருமான வரி கட்டவில்லை என்றும்தெரியவந்துள்ளது. எனவே, மதனின் சொத்துகள் குறித்து வருமான வரித் துறைக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

“மதனை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் துறையில் புகார் அளிக்கலாம்.dcpccbi@gmail.comஎன்ற முகவரி மூலமாகவும் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in