Published : 19 Jun 2021 03:12 am

Updated : 19 Jun 2021 08:30 am

 

Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 08:30 AM

குன்னூர் சாலையில் வாகனத்தை வழிமறித்த கரடி

coonoor-road

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, அளக்கரை செல்லும் சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போதுஅவ்வழியாக வந்த வாகனத்தைகரடி வழிமறித்து நின்றது. வாகனத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து, ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து, தேயிலைத் தோட்டத்துக்குள் கரடி சென்றது. இதேபோல இருசக்கர வாகனஓட்டிகளையும், கரடி அச்சுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.


அப்பகுதியில் கரடியின் தொல்லை அதிகரித்து வருவதால்,பணிக்கு செல்ல அச்சமாக உள்ளதாக, தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



குன்னூர் சாலைவாகனத்தை வழிமறித்த கரடிகரடிவழிமறித்த கரடிCoonoor Road

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x