

காஷ்மீருக்கு விடுதலை கேட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இதில் பாகிஸ் தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயி லுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலின் வரலாறு, தரிசன நேரம், போக்குவரத்து வழிகள், தொடர்பு முகவரி, திருவிழா நடைபெறும் நாட்கள், இ-சேவைகள் குறித்த விவரங்களை பக்தர்களுக்கு தெரி விப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் www.srirangam.org என்ற இணையதளம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த இணையதளம் முடக் கப்பட்டது. வழக்கமான முகப்பு பக்கத்துக்கு பதிலாக கருப்புநிற திரை தெரிந்தது. அதில் இணைய தளத்தை முடக்கியது ‘ஹேக்கர் ஹீஸ்’ எனவும், பாகிஸ்தான் வாழ்க எனவும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அதில், “காஷ்மீர் விடுதலையே இலக்கு. ராணுவ ஆட்சியை காஷ்மீர் விரும்பவில்லை. நாங்கள் கேட்பது சுதந்திரம்தான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, பாகிஸ்தானின் இணையதளங்களை முடக்க நினைத்தால், இந்தியாவின் சைபர் ஸ்பேஸ் முழுவதையும் நாங்கள் அழித்துவிடுவோம் எனவும் அவர் கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொ.ஜெயரா மன் ஸ்ரீரங்கம் போலீஸில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து முடக் கப்பட்ட இணையதளத்தை மீட்டு எடுக்கும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. காலை 10 மணி முதல் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே நாளில்..
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று முடக்கிய மர்ம நபர்கள் அதில், பாகிஸ்தான் தேசியக் கொடியைப் பறக்கவிட்டனர். அதற்கடுத்த 2 நாட்களில் (டிசம்பர் 14-ம் தேதி) மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணைய தளத்தையும் மர்ம நபர்கள் முடக்கினர். இவ்வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.