Published : 13 Dec 2015 11:30 AM
Last Updated : 13 Dec 2015 11:30 AM

நெல்லை மாவட்டத்தில் 11 அணைகளும் நிரம்பின: தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை

தாமிரபரணியில் தொடர்ந்து நேற் றும் வெள்ளப்பெருக்கு இருந்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணை களில் இருந்து 8,123 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனா, ராம நதி, கருப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, அடவிநயினார் ஆகிய 11 அணைகளும் நிரம்பிவிட்டன. இந்த அணைகளில் இருந்து உபரிநீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணி, நம்பி யாறு, வடக்குபச்சையாறு, சிற்றாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களில் இருந் தும் உபரிநீர் மதகுகள் வழியாக வெளி யேறி கால்வாய்களில் செல்கிறது.

அணைகளுக்கு வரும் நீர்வரத்து விவரம் (கனஅடியில்):

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4,879 கனஅடி தண்ணீரும், மணிமுத் தாறு அணைக்கு 2,694, கடனா அணைக்கு 373, ராம நதி அணைக்கு 66, கருப்பா நதிக்கு 210, நம்பியாறு அணைக்கு 1,083 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

10 ஆயிரம் கனஅடி

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆறுகளில் விடப்பட்டு உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண் ணீர் 5,429 கனஅடியாகவும், மணி முத்தாறு அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் 2,694 கனஅடி யாகவும் நேற்று குறைக்கப்பட்டிருந் தது. கடனா, ராமநதி அணைகளில் இருந்து மொத்தம் 1,000 கனஅடி தண்ணீர் ஆற்றில் வருகிறது.

அணைகளில் இருந்து வெளியேற் றப்படும் தண்ணீருடன் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து ஆற்றில் 10 ஆயி ரம் கனஅடி தண்ணீர் நேற்று பாய்ந்தோடியது.

தாமிரபரணியில் பாய்ந்தோடும் வெள்ளம், கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், அரிய நாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர், வைகுண்டம் ஆகிய தடுப்பணைகளை கடந்து கடலுக்குச் செல்கிறது. வழியில் மொத்தம் 280 கி.மீ. நீளமுள்ள 11 கால்வாய்கள், 187 குளங்கள் ஆகியவற்றுக்கும் தாமிரபரணி தண்ணீர் செல்கிறது. மழையால் இந்த தடுப்பணைகளிலும், கால்வாய்களிலும் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது.

தொடர்ந்து தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை அடுத்து கரையோர குடியிருப்பு பகுதி களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய குற்றாலம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நேற்று மாலை மழை கொட்டியது. இதனால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து, 5 பிரிவுகளைச் சேர்ந்த 225 பேர் நேற்று நெல்லைக்கு வந்தனர்.

இவர்கள் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x