

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளில் அடையாள அட்டை இல்லாதவர் களிடம் வரும் 22-ம் தேதி வரை யில் கெடுபிடி செய்ய வேண்டாம் என டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரயில் டிக் கெட் முன்பதிவு செய்து சென்னையிலிருந்து பயணம் செய்யும் பயணிகளிடம் அடையாள அட்டை கட்டாயம் என கேட்டு, வரும் 22-ம் தேதி வரையில் தொந்தரவு செய்ய வேண்டாம் என டிக்கெட் பரிசோதகர்களுக்கு வாய்வழி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து ஆவணங்களை பறிகொடுத்த மக்களுக்கு மட்டுமே அடையாள அட் டையை, வரும் 22-ம் தேதி வரையில் கட்டாயப்படுத்தி கேட்க வேண்டாம் என அறிவுறுத்தி யுள்ளோம். இது அனைத்து பயணிகளுக்கும் பொருந்தாது’’ என்றனர்.