மழை வெள்ளத்தால் மாநகரின் 50% பேருந்துகளுக்கு பலத்த சேதம்

மழை வெள்ளத்தால் மாநகரின் 50% பேருந்துகளுக்கு பலத்த சேதம்
Updated on
1 min read

சென்னையில் பெய்த கனமழை பாதிப்பால் நகரில் ஓடும் பேருந்துகளில் 50 சதவீதத்துக்கு மேலானவை பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

மோசமான நிலையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டார தகவல் கூறுகின்றது.

மாநகராட்சி தரப்பு தகவலின்படி நகரில் ஓடும் பேருந்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலானவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகள் பலவற்றும் கடுமையாக சேதமடைந்தன. ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும் மோசமான சாலைகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மக்களின் தேவைக்காக சென்னையில் 4 நாட்களுக்கு பேருந்து சேவை இலவசமாக இயக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறும்போது, "மக்களுக்காக போக்குவரத்து சேவையை வழங்க வேண்டியது எங்களது கடமை. ஆனால் டிப்போ அனைத்திலும் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வண்டிக்குள் புகுந்த தண்ணீரால் கியர் பாக்ஸ், என்ஜின், ப்ரேக் பழுதடைந்துவிட்டன"

உணவு விடுதிகள் செயல்படாத நிலையில் கடும் மழை பெய்த நாட்களில் தொடர்ந்து 16 மணிநேரம் பணியில் நாங்கள் இருந்திருக்கிறோம்.

மழை வெள்ளம் அதிகமாக இருந்த பகுதிகளுக்கு பேருந்துகள் செல்ல முடியவில்லை. ஆனால் அந்த பகுதிகளுக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதால் மாற்று பாதையில் சுற்றி சென்ற இடத்தை அடைய வேண்டிய நிலை இருந்தது.

பேருந்து சேவை இலவசமாக இயக்கப்பட்ட நாட்களின் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவிலேயே இருந்தது. இதனால் சேதத்துடனையே பேருந்துகள் இயங்கின. மோசமான சாலைகளில் இயங்கியதால் பழுது மேலும் அதிமாக தான் ஆயின. விரைவில் பேருந்து உபரி பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் ஆபாயமும் இருக்கிறது. அந்த அளவில் மாநகர பேருந்துகள் சேதமடைந்து கிடக்கின்றன." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in