

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் பாலாம்பாள் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் சிம்பு பாடி, அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் பீப் பாடல் சர்ச்சை இப்போது ஊடகங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்பாடலை இணையத்தில் வெளியிட்டது யார்? எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது? என எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போலீஸார் பம்பரமாக சுழன்று அவசர கதியில் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிம்பு மீது காட்டிய இதே வேகத்தை தமிழக போலீஸார், இதைவிட கேவலமாக பெண்களை தவறான கண்ணோட்டத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக கொச்சைப்படுத்தும் டிவி மீடியா, சினிமா பாடல்கள், வசனங்கள், அதை உருவாக்கியவர்கள், காட்சிப்படுத்தியவர்கள் மீதும் காட்டி வழக்குப்பதிய வேண்டும்.
சினிமா தணிக்கை குழுவும்கூட ஆபாசமான, ஆட்சேபகரமான வார்த் தைகளை சினிமாவில் அழிக் காமல் அதை சைலன்ட் மோடில் காட்டுகிறது. சிம்புவின் பீப் பாடல் இன்னும் பொது பயன்பாட்டிற்கு விடப்படவில்லை. ஆனால் போலீஸாரின் தேவையற்ற துரித நடவடிக்கையால், அதற்கு மறைமுக விளம்பரம் கிடைத்து விட்டது. உண்மையிலேயே தமிழக போலீஸார் பாரம்பரியம் அழியாமல் பெண்களின் மாண்பை காப் பாற்றுவதாக இருந்தால், எதிர்கால தலைமுறையை கவனத்தில் கொண்டு பணம் பண்ணுவதற்காக பெண்களை கேவலமாக சித்தரிக்கும் எல்லோர் மீதும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.