

டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு போதிய நிவாரண உதவிகளை அரசு செய்யாததைக் கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நடத்திய விஜயகாந்த், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்ய அரசு தவறிவிட்டது. பல இடங்களில் வடிகால்கள் சரியாக தூர்வாரப்படவில்லை. அதன் காரணமாகவே மழைநீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது" என்றார்.