ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோயில் குளங்களை சீரமைக்க முடிவு: விவரங்களை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோயில் குளங்களை சீரமைக்க முடிவு: விவரங்களை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவு
Updated on
1 min read

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோயில் குளங்களைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சீரமைக்கப்பட வேண்டியகோயில் குளங்களின் விவரங்களை அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தலைமையில் கடந்த 12-ம் தேதி நடந்தசீராய்வு கூட்டத்தில், குளங்களை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்தஏதுவாக அவற்றை ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டில் சீரமைக்கப்பட உள்ள குளங்கள் குறித்த அறிவிப்பு இந்நிதியாண்டில் சட்டப்பேரவை அறிவிப்பில் இடம்பெற உள்ளது.

எனவே, சார்நிலை அலுவலர்கள், பழுதடைந்துள்ள, சீரமைக்கப்பட வேண்டிய குளங்கள் பற்றியவிவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்து, அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ள பட்டியல் குறித்து 5 நாட்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in