வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 2 சிங்கங்களுக்கு குரோம்பேட்டை மக்கள் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.படம்: எம்.முத்துகணேஷ்
தமிழகம்
கரோனா தொற்றால் இறந்த சிங்கங்களுக்கு அஞ்சலி
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஜூன் 3-ம் தேதி 10 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் நீலா என்ற சிங்கம் இறந்தது.
தொடர்ந்து, மற்ற சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் 12 வயதான பத்மநாபன் என்ற சிங்கம் இறந்தது. தற்போது மற்ற 8 சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றால் இறந்த, சிங்கங்களுக்கு, குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையம் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில், நேற்று குரோம்பேட்டை நியுகாலனியில், மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் நடந்த அஞ்சலி கூட்டத்தில், அழிந்து வரும் சிங்கங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
