

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்லும் மலைச் சாலையில் ஒற்றை யானை வாகனங்களை வழிமறிப்பதால் ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள மலை கிராம ங்களான பண்ணைக்காடு, தாண்டி க்குடி பகுதிகளில் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் ஒற்றை காட்டு யானை சில தினங்களாக முகாமிட்டுள்ளது.
இது இரவு நேரங்களில் வாழை, பலா உள்ளிட்ட பயிர் களை சேதப்படுத்தி வருகிறது. பேருந்து போக்குவரத்து இல்லா தநிலையில் மலை கிராம மக்கள் பெரும்பாலானோர் கொடைக் கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகனம், கார்களில் சென்று வருகின்றனர். இரவில் தனியாக வாகனத்தில் வருப வர்களை சாலையின் குறுக்கே அச்சுறுத்தும் வகையில் ஒற்றை யானை நகராமல் நீண்ட நேரம் நிற்கிறது. சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்களை விரட்டவும் செய்கிறது.
இதனால் பண்ணைக்காடு, தாண்டிக்குடி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை யானையை தங்கள் பகுதியில் இருந்து வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணைக்காடு, தாண்டிக்குடி பகுதி மக்கள் வனத் துறையை வலியுறுத்தி வருகின்றனர்.