Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மதுரை அரசு மருத்துவமனையில் 2,386 படுக்கைகள் தயார்: டீன் ரத்தினவேலு தகவல்

மதுரை

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை யிலும் 2,386 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக டீன் ரத்தினவேலு தெரிவித்தார்.

கரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இரண்டாவது அலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் அதிக அளவில் உயிரிழந்தனர். அதன் பின் ஆக்சி ஜன் உற்பத்தி அதிகரிக் கப்பட்டு, போதிய படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

மூன்றாவது அலையில் மரபணு மாறிய கரோனா வைரஸால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், அரசு மருத்துவமனைகளில் குழந்தை களுக்கான பிரிவில் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் ஏற்கெனவே குழந்தைகளுக்கான கரோனா வார்டு, கர்ப்பிணிகளுக்கான கரோனா வார்டு அமைக்கப்பட் டுள்ளது. மேலும், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன.

இதுகுறித்து டீன் ரத்தினவேலு கூறியதாவது: கரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிறப்பு கரோனா சிகிச்சை பிரிவில் 954 படுக்கைகள், தலைக்காய சிகிச்சைப் பிரிவில் 514 படுக்கைகள், பழைய கட்டிட பிரசவ வார்டில் 170 படுக்கைகள், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 748 படுக்கைகள் என மொத்தம் 2,386 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 1,326 ஆக்சிஜன் படுக்கைகள், 237 செறிவூட்டப்பட்ட படுக்கைகள், 38 வெண்டிலேட்டர் படுக்கைகள், 35 தொடர்ச்சியான ஆக்சிஜன் செல்லும் படுக்கைகள், 112 ஐசியூ படுக்கைகள் உள்ளன.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு முகக்கவசம் அணிய முடியாது. தடுப்பூசி செலுத்தவும் முடியாத நிலை உள்ளது. எனவே, கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் குழந்தைகளை பெற் றோர்கள் பாதுகாப்புடன் பரா மரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x