Published : 12 Dec 2015 09:28 AM
Last Updated : 12 Dec 2015 09:28 AM

செம்பரம்பாக்கம் திறப்பு விவகாரம்: விசாரணை கமிஷன் அமைக்க கருணாநிதி வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரிடம் கருணாநிதி வலியுறுத்தல்



*

செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்துவிட்டது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் ரோசய்யாவை நேற்று மாலை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் கருணாநிதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு மற்றும் மழையால் உள்வாங்கிய நீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுப் பணித்துறை நிர்வாகத் தினர் கூறியதை அரசு தரப்பு கேட்கவில்லை. நவம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் குறைந்த அளவு மழை பெய்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் வரை நீர் நிரம்பியது. அப்போதே, நீரை திறந்துவிட்டு, ஏரி கொள்ளளவை 75 சதவீதத்துக்கு குறைவாக வைத்திருந்தால், டிசம்பர் 1, 2-ம் தேதிகளில் பெய்த மழையின் போது மொத்தமாக நீரை வெளியேற்றியிருக்க தேவை இருந்திருக்காது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை குறித்து டிசம்பர் 1-ம் தேதிக்கு 2 நாட்கள் முன்னரே தலைமைச் செய லருக்கு தகவல் தெரிவித்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், படிப்படி யாக நீரை வெளியேற்ற அனுமதி கோரினர். ஆனால், முதல்வரிடம் இருந்து ஆணை வராததால் அப் போது, ஏரியை திறந்துவிடவில்லை என்று தெரிகிறது.

இது இயற்கை பேரிடர் அல்ல- மனிதரால் உருவாக்கப்பட்ட பேரி டர் ஆகும்.

செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு தாமதமானது ஏன் என்பது பற்றியும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையிலும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, “செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டதில் நடைபெற்ற தவறு களையும், அதனால் ஏற்பட்ட பாதகங் களையும் ஆளுநரிடம் தெரிவித் தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒற்றுமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியது உண்மை” என்றார்.

செம்பரம்பாக்கம் ஏரியை அரசு முறையாகத் திறந்துவிடவில்லை என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து மனு அளித்தார். உடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x