அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வன்முறையைத் தூண்டும் வகையில் சிடி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடைவிதித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இரு பிரிவின ருக்கிடையே வன்முறையைத் தூண்டும் நோக்கில் சிடி வெளி யிட்டதாக தர்மபுரி காவல்துறையி னர் என் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் பிரச்சினை தொடர்பான சில நிகழ்வுகளைத் தொகுத்து ‘சொந்தங்களே சிந்திப்பீர்’ என்ற தலைப்பில் சிடி வெளியிட் டதாகவும், அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்றதாகவும் கூறி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

இந்த சிடியை நான் விநியோகிக் கவில்லை. புகாரில் அதுபோல கூறப்படவும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தர்மபுரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பது டன், நேரில் ஆஜராவதில் இருந் தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு வாதிட்டார். அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரருக்கு எதிராக தர்மபுரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்தி ரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக் கால தடை விதிக்கப்படுகிறது. வரும் 29-ம் தேதி அந்த நீதிமன் றத்தில் மனுதாரர் ஆஜராவ தில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. மனுவுக்கு தர்மபுரி காவல்நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in