

அதிமுகவில் இருந்து விலகியுள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னைமண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், ஜெயலலிதா காலத்தில் இருந்த முக்கியத்துவம் ஐடிபிரிவுக்கு தற்போது இல்லை என்றுகுற்றம் சாட்டியுள்ளார்.
ராஜினாமா குறித்து அவர் இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது:
ஜெயலலிதா பல்வேறு சுதந்திரங்களை ஐடி பிரிவுக்கு கொடுத்தார்.இப்போது இந்த பிரிவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நான் தேர்தலுக்கு முன் பல விஷயங்களை தலைமைக்கு எடுத்து கூறினேன்.
நிலைமை சரியில்லை; நாம் தோற்றுவிடும் நிலை உள்ளது என்பதை கூறினேன். தொகுதி நிலவரம் உள்ளிட்டவற்றையும் தெரிவித்தேன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
இப்போது தகவல் தொழில் நுட்பபிரிவினர் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு தொலை நோக்கு பார்வை இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.