‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது
Updated on
1 min read

‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்குகிறது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 50 க்கும் மேலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அருணா சாய்ராம், ஷோபனா, நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரையிலும் நடைபெற உள்ளது. சென்னையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in