ஹாட் லீக்ஸ்: அழகிரி இருக்க பயமேன்!

ஹாட் லீக்ஸ்: அழகிரி இருக்க பயமேன்!
Updated on
1 min read

மு.க.அழகிரி ஆதரவாளர் வழக்கறிஞர் வீரகதிரவன். அழகிரிக்காக பல வழக்குகளில் ஆஜரானவர். திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் பொது இடத்தில் சிலை வைக்க நீதிமன்றத்தில் போராடியதிலும் இவருக்குப் பங்குண்டு. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து வீரகதிரவனை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தற்காலிக அரசு வழக்கறிஞராக நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. இந்தப் பணி நிரந்தரம் செய்யப்படும்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதவி வீரகதிரவனுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in