Last Updated : 16 Jun, 2021 03:12 AM

 

Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

அரசு ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தலாம்; மையங்களில் குவியும் பொதுமக்கள்: தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும்- மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆலோசனை

சென்னை

கரோனா தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். மையங்களில் பொதுமக்கள் கூடுவதால்தொற்று பரவல் ஏற்பட வாய்ப்
புள்ளது என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கரோனா 2-வது
அலை தீவிரமானதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவோர்எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூ
சிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மையங்களில் தினமும் 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி
போடப்படும் என அறிவிக்கப்பட்டு டோக்கன் தரப்படுகிறது.

இந்த டோக்கனை பெறுவதற்காக அதிகாலை முதலே மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். டோக்கன் விநியோகிக்கும் நேரத்தில் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. சிறிதும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு டோக்கனை பெற முயற்சிக்கின்றனர். பலர் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள் மையங்களிலேயே காத்திருக்கின்றனர். இதன்மூலம் தடுப்பூசிபோட்டுக் கொள்ள வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தொற்று பரவலை தடுப்பதில் கவனம் செலுத்துவதிலும் அதே அளவு கவனம் செலுத்துவது அவசியம். ஆனால், தடுப்பூசி மையங்கள் தொற்று பரவல்இடமாக மாறி வருகிறது.

ஒவ்வொரு மையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனை பின்
பற்றாமல், பதிவு செய்யாமல் வருபவர்களுக்கும், மையத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடப்படுகிறது. இதுதான் மையங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு முக்கிய காரணம்.

இணையதளத்தில் பதிவு செய்து வருவதை தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும். பொதுமக்களில் பலருக்கு இணையதளத்தில் பதிவு செய்யதெரியாது. அதனால், கிராம நிர்வாக அதிகாரி, கிராமப்புற செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தலாம். தமிழகத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தினால் விரைவாக பதிவு செய்ய முடியும். அப்படி இல்லையென்றால், தடுப்பூசிக்காக ஒரு செல்போன் எண்ணை அறிவித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பவர்களின் ஆதார் எண் மற்றும் அஞ்சல் குறியீடு எண்ணை குறுஞ்செய்தியாக பெறலாம். அதன்படி,
பதிவுசெய்து முன்னுரிமை அடிப்படையில் அருகில் உள்ள மையத்தில் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இதுவும் முடியாது என்றால்,மையங்களில் தடுப்பூசிக்கான டோக்கனை விநியோகிப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட தேதி, நேரத்
தில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகிக்கலாம்.

இதன்மூலம், மையங்களில் அதிகஅளவில் பொதுமக்கள் கூடுவதுதடுக்கப்படுவதுடன், கரோனா தொற்று பரவலும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பற்றாக்குறைதான் காரணம்பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியது:

கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், விரைவாக அனைவருக்கும் போடமுடியவில்லை. இதுதான் முக்கிய பிரச்சினை. தேவையான அளவு தடுப்பூசி கிடைத்துவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. இன்னும் கூடுதல் மையங்களை அமைத்து24 மணி நேரமும் தடுப்பூசியை போடலாம். எப்போது மையங்களுக்கு சென்றாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றநிலை உருவாகும். பொதுமக்களின் கூட்டமும் இருக்காது. தடுப்பூசி குறைவாக வருவதால், முதலில் சென்று போட்டுக் கொள்ள வேண்டும் என நினைத்து மக்கள் குவிந்து விடுகின்றனர். ஆனாலும் டோக்கன் விநியோகித்து தான் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கினால் எழுத படிக்க தெரியாதவர்கள், கிராமங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான், பதிவு செய்து வருபவர்களுக்கும், பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு மையங்களில் பதிவு செய்தும் தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து இதுவரை சுமார் 1.16 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1 கோடியே 8 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடியாக இருக்கும். மாதத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் கிடைத்தால், 5 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசியை போட்டுவிடலாம். அதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x