

செங்கல்பட்டு கோட்டத்தில் அவசரகால தொடர் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜூன் 16) முதல் வரும் 19-ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று (ஜூன் 16) புலிப்பாக்கம், பரனூர், தாமாபுரம், சோகன்டி, மேலேரிபாக்கம், ஓரக்காட்டு பேட்டை, காவித்தண்டலம், களியபேட்டை, விச்சூர், திருவாணைகோயில், வெங்கம்பாக்கம், பூந்தண்டலம், பெருமாள்சேரி, வாயலூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நாளை செங்கல் பட்டு நத்தம் பகுதி, பி.வி.களத்தூர்,உதயம் பாக்கம், மனப்பாக்கம், குமாரவாடி, பள்ளியகரம், சாலவாக்கம் கூட்டுரோடு, மானாம்பதி,ஆமூர், சிருதாவூர், வீராபுரம், ஈகை, பெரியகாட்டுப்பாக்கம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வரும் 18-ம் தேதி செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், அம்மணம்பாக்கம், அனுமந்தை, தேனூர், பட்டரவாக்கம், பூஞ்சேரி வெண்புருஷசம், கொக்கிலமேடு, வழுவதூர், மாம்பாக்கம், தத்தலூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வரும் 19-ம் தேதி பாரேரி, அலமேலுமங்காபுரம், செங்குன்றம் பகுதி, ஆத்தூர், திம்மாவரம், பிலாப்பூர், காவூர், சிதன்டிமங்கலம், மையூர், சட்ராஸ், நாதன்மேடு, நெரும்பூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மறைமலைநகர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் மின் நுகர்வோர், தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடைமற்றும் தடங்கல்கள் தொடர்பாக 1912, 18004258977, 044-27423525,9444099477 என்ற எண்களில் புகார்செய்யலாம். இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய மின் தடை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (ஜூன் 16) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
வல்லாஞ்சேரி, கிழக்கு பொத்தேரி, விஜயலட்சுமி நகர், கலைவாணி நகர், கோவிந்தாபுரம், கோகுலபுரம், செங்குன்றம் ஒருபகுதி, மகாலட்சுமி நகர், நந்திவரம், பெருமாட்டுநல்லூர், மூலகழனி, நரியம்பாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், அழகூர், மாகாணயம், கொளத்தூர், மண்ணிவாக்கம், கே.கே. நகர், கரசங்கால், ஊத்துக்குழி, வேங்கடமங்கலம், கானத்தூர் ஒரு பகுதி, வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், ஜே.ஜே. நகர், செட்டிநாடு ஸ்ரீநகர், திருப் போரூர் ஒரு பகுதி, பாரதி நகர், மேட்டுத்தண்டலம், படவேட்டம்மன் கோயில் தெரு, பாலாஜி நகர், கண்ணகப்பட்டு, திருப்போரூர்நான்கு மாடவீதிகள், கடும்பாடி,வடகடும்பாடி, பெருமாளேரி, அம்பாள் நகர், ஓட்டேரி, முள்ளிப்பாக்கம், புலிகுடிவனம், பாலூர்,பூ இலுப்பை, ராயமங்கலம், எடர்குன்றம், மயிலை, ரேவதிபுரம், ராம்நகர், கோதாவரி நகர், மதுரை மீனாட்சிபுரம், திரு வடிசூலம், பங்காருபேட்டை, பொன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது.