

கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு நேற்று முதல் வழங் கப்படுகின்றன.
குறிஞ்சிப்பாடி எஸ்கேஎஸ் நகரில் உள்ள நியாய விலை கடையில் நேற்று வேளாண் துறைஅமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல் வம் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், “கடலூர்மாவட்டத்தில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 83 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண தொகை 2-ம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.149 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து குறிஞ்சிப் பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தில் 81 உழவர் உற்பத் தியாளர் குழுக்களுக்கு ரூ.4.5 கோடியில் இயந்திரங்களை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 நியாய விலைக் கடைகளில் 4 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங் களுக்கு மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் கரோனா நிவா ரணத் தொகையின் 2-வது தவணை நேற்று முதல் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூரில் நியாய விலைக் கடை ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள1,254 நியாயவிலைக் கடைக ளில் 5,93,363 குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா சிறப்பு நிதி உதவித்தொகை இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்புகள் நேற்று முதல் வழங்கப்பட்டு வரு கிறது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே தி. எடையார் மற் றும் சித்தலிங்கமடம் ஆகிய கிராமங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா சிறப்பு நிதி உதவித்தொகை ரூ.2ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார்.
இதே போல செஞ்சி அருகே செம்மேடு, மேம்பாப்பாம்பாடி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அமைச்சர் மஸ்தான் வழங்கி, இதனை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் இதனை தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் நேற்று தொடங்கி வைத்தார்.