

தமிழகத்தில் டெங்கு காய்ச்ச லால் 3,841 பேர் பாதிக்கப்பட்டிருப் பதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இன்னும் பல்வேறு இடங் களில் மழைநீர் வடியாமல் தேங்கி யிருக்கிறது. இதன் மூலம் கொசுக் களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் டெங்கு காய்ச் சலை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக் களின் உற்பத்தியும் அதி கரித்து வருகின்றன. சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு காய்ச் சல் பரவுவதை தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப் பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள் ளப்படுகின்றன.
கொசுக்கள் அதிகரிப்பு
ஆனாலும் ‘ஏடிஸ்’ கொசுக் களின் உற்பத்தி அதிகரிப்பால் டெங்கு காய்ச்சலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள் ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், அறிகுறிகளுடனும் ஏராள மானோர் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு, மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தில், “தமிழகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,012 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஜனவரி 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 3,841 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மட்டும் சுமார் 1,000 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.