ஹாட் லீக்ஸ்: விசுவநாதனை விரும்பாத ஓபிஎஸ்!

ஹாட் லீக்ஸ்: விசுவநாதனை விரும்பாத ஓபிஎஸ்!
Updated on
1 min read

கட்சி எம்எல்ஏ-க்களை கட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்புமிக்க கொறடா பதவிக்கு அதிமுகவில் பலரும் மோதுகிறார்கள். இந்தப் பதவிக்காக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஆனால், ஏற்கெனவே ராஜ்யசபா எம்பி பதவிக்கு விசுவநாதன் பெயரை எடப்பாடியார் சிபாரிசு செய்தபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்து அந்தப் பதவியை வைத்திலிங்கத்துக்கு கொடுக்க வைத்தாராம் ஓபிஎஸ். அதனால், கொறடா பதவியையும் விசுவுக்கு கொடுக்க விரும்பமாட்டார் ஓபிஎஸ் என்கிறார்கள். அவரது சாய்ஸ் மீண்டும் வைத்தியாகவே இருப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சசிகலாவின் ஆடியோ ரிலீஸ் அரசியலால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் வைத்தியை கொறடாவாக்கினால் நாளைக்கே ஓபிஎஸ்ஸும் வைத்தியும் கூட்டு சேர்ந்துகொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக குட்டி கலாட்டா செய்தால் என்ன செய்வது என்று யோசிக்கும் எடப்பாடியார், சசியை கடுமையாக எதிர்க்கும் கே.பி.முனுசாமியை கொறடாவாக்கும் சிந்தனையில் இருக்கிறாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in