

பெரியாருக்குப் பிறகு திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ் ணன் குற்றம்சாட்டினார்.
ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு பெங்களூரு பெண்ணுரிமை செயற்பாட்டாளர் சிந்தியா ஸ்டீபன் தலைமை வகித்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தியாவில் ஒருபுறம் அறிவி யல் வளர்ச்சி அடைந்தாலும், மறு புறம் ஜாதிக் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜாதி, மத அதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும்.
தலித் மக்களின் பாதுகாப்புக்காக 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை பாதுகாப்பு சட்டம், 1989-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை முறையாக அமல் படுத்தாததால்தான் பல பிரச்சினை கள் நிகழ்கின்றன.
பெரியாருக்குப் பிறகு தற் போதைய திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ஜாதிக் கொடுமை களுக்கு எதிராக எந்த போராட்டத் தையும் நடத்தவில்லை. ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போரா டும்போதே கல்வி, பொருளாதார உரிமைக்காகவும் போராட வேண் டும் என்றார்.
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசி யது: முன்னர் ஜாதி சங்கங்களின் தலைவர்கள் மக்கள் பிரச்சினை களுக்காக முன் நின்றனர். ஆனால், தற்போதைய ஜாதி சங்கத் தலை வர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவே சங்கங்களை நடத்துகின்றனர் என்றார். எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் இந்த நாட்டில் பங்கேற்றார்.