Published : 14 Jun 2021 07:08 PM
Last Updated : 14 Jun 2021 07:08 PM

தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 

சென்னை

தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்:

1. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட ஜான் லூயிஸ், உள்துறை, மது மற்றும் கலால் பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட மேகராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. பத்திரப் பதிவுத்துறை ஐஜி ஷங்கர் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலர் கருணாகரன் மாற்றப்பட்டு, மீன்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக மேலாண் இயக்குநர் ஜெயந்தி மாற்றப்பட்டு, நில சீர்திருத்தத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துணைச் செயலர் கற்பகம் மாற்றம் செய்யப்பட்டு, வணிக வரித்துறை நிர்வாகப் பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. இ-சேவை துறை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு போக்குவரத்துத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே மாற்றப்பட்டு, நிதித்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. தொழிற்சாலைத் துறை கூடுதல் செயலர் சுந்தரவல்லி மாற்றப்பட்டு, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் க்ரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா மாற்றப்பட்டு, தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. நில நிர்வாகத் துறை ஆணையர் விபு நாயர் மாற்றப்பட்டு, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஊக்கம் பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. தமிழ்நாடு ஃபைபர் நெட் கழக மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் மாற்றப்பட்டு, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் பவன்குமார் ஷெராவத் மாற்றப்பட்டு, துணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. அரசு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலர் அம்ரித ஜோதி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. மாநில மனித உரிமை ஆணையச் செயலர் மகேஸ்வரி மாற்றப்பட்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக் கழக சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராகப் பதவி வகிக்கும் பழனிசாமி மாற்றப்பட்டு, நில நிர்வாகத்துறை (c&i) பதவி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மாற்றப்பட்டு கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சமூக நல ஆணையர் ஆபிரகாம் மாற்றப்பட்டு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மலர்விழி விடுப்பில் இருந்து திரும்பி வந்த நிலையில் அறிவியல் நகரத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத் துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் மாற்றப்பட்டு நிதித் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத் தலைமை நிர்வாக அலுவலர் சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் பட்டு வளர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் இடமாற்றம் செய்யப்பட்டு அருங்காட்சியகங்கள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. நகரப் பஞ்சாயத்து இயக்குநர் பழனிசாமி இடமாற்றம் செய்யப்பட்டு ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு கனிம வளத்துறை (சேலம்) மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் விவேகானந்தன் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29. மாநில வளர்ச்சிக் கொள்கை ஆலோசனை உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் இடமாற்றம் செய்யப்பட்டு, சிமெண்ட் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சுற்றுலா மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சரண்யா ஹரி மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (மத்திய) வட்டாரத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

32. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் மாற்றப்பட்டு, வெளிநாடுவாழ் மனிதவள மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

33. தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநராகப் பதவி வகிக்கும் ராஜாமணி மாற்றப்பட்டு, உப்பு கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34. நகராட்சி நிர்வாக ஆணையராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட பாஸ்கரன், தமிழ்நாடு கடல்வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் நந்தகோபால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

36. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலர் தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. வணிகவரி (அதிக அளவு வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையர் சாருஸ்ரீ மாற்றப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38. சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39. அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (பயிற்சி) துறை முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா, காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x