Published : 23 Dec 2015 07:55 AM
Last Updated : 23 Dec 2015 07:55 AM

குற்றவாளிகளை பிடித்த 42 போலீஸார், 3 இளைஞர்களுக்கு பரிசு: மாநகர காவல் ஆணையர் வழங்கினார்

குற்றவாளிகளை பிடித்த 42 போலீஸார் மற்றும் 3 இளைஞர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் பரிசு வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை யில் கடந்த நவம்பர் 21-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து ரூ.4.10 லட்சத்தை திருடிய ரத்தினக் குமார், உதயக்குமார் ஆகியோரை பொது மக்கள் உதவியுடன் அண்ணா சாலை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.

நவம்பர் 30ல் ராயப்பேட்டை நடேசன் சாலையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளர் கண்ணன் சுற்றி வளைத்து பிடித்தார். ராயப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து வாகனங்களை திருடி வந்த முஜாகீர் உசேன்(24) என்ற நபரை உதவி ஆய்வாளர் பலராமன், தலைமைக் காவலர் துக்காராம் ஆகியோர் கைது செய்தனர்.

இதேபோல நவம்பர் 27 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் திருட்டு, செயின்பறிப்பு, வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 27 பேரை சம்பவத்தின்போதே பணியில் இருந்த போலீஸார் கைது செய்துள்ளனர்.

இப்படி சிறப்பாக பணிபுரிந்த ஒரு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர் கள், 7 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 4 தலைமைக் காவலர்கள், 7 முதல் நிலைக் காவலர்கள், 8 இரண்டாம் நிலைக் காவலர் கள், 9 சிறப்பு காவல் இளைஞர் படையி னர், 2 ஊர்க்காவல் படையினர் என 42 போலீஸாரையும், பரத் மற்றும் அசோக் குமார் உட்பட 3 இளைஞர்களையும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று காலையில் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார். கூடுதல் காவல் ஆணையாளர்கள் வரதராஜு, தர் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x