Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் விநியோகம்: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், எம்.பிக்கள் திருச்சி என்.சிவா, சு.திருநாவுக்கரசர், ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணையாக ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங் கினார். மேலும், சமூக நலத் துறை சார்பில் ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள் 180 பேருக்கு தலா ரூ.2,000 வீதம் நிவாரணத் தொகை மற்றும் பெண்கள் 175 பேருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் கரோனா பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றையும் அமைச் சர் கே.என்.நேரு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் சு.சிவ ராசு தலைமை வகித்தார். மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக் கரசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுப் பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் க.பா.அருளரசு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, பொது விநி யோகத் திட்ட துணைப் பதிவாளர் நா.பத்மகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் க.அன்பழகன், மாவட்ட சமூக நல அலுவலர் அ.தமீமுன்னிசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அரசுத் துறை அலுவலர்கள் கூறியது: திருச்சி மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக இதுவரை 7,93,472 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.158.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகளில் இணைக் கப்பட்டுள்ள 8,13,001 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.162.60 கோடி வழங்கப்படவுள்ளது என்றனர்.

ஜங்ஷன் மேம்பால பணி விரைவில் தொடங்கும்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கூறும்போது, “திருச்சி ஜங்ஷனில் நிறைவடையாமல் உள்ள மேம்பாலத்துக்கு, ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தை ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஏற்கெனவே 2 முறை நேரில் சந்தித்து வலியுறுத் தியுள்ளேன். அதற்கு ஈடாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையணிக் குச் சொந்தமான இடத்தை அளிப்பது தொடர்பாக முடிவு செய்யப் பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் டெல்லி செல்லும்போது மீண்டும் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வலியுறுத்தி, உரிய அரசாணை யுடன் வருவேன். விரைவில் பணிகள் தொடங்கும்” என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறும்போது, "நாட்டிலேயே எம்.பி தொகுதி நிதியின் கீழ் முதன்முதலில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்தான் எஸ்கலேட்டர் வசதி நிறுவப் பட்டது. இதைப் பின்பற்றித்தான் பிற இடங்களில் எஸ்கலேட்டர் நிறுவப்பட்டுள்ளது. ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டால், கட்டணம் உயர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x