

தமிழக முதல்வரின் நடவடிக்கை யால், தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்தார்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், கரூர் மாவட் டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் உள்ள 3,19,816 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 4 கிலோ வீதம் 1,279 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கரூர் பசுபதிபாளையத்தில் நடைபெற்ற விழாவில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4 கிலோ அரிசியை வழங்கி பேசியது:
தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கி உள் ளனர். கரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக் கையில் கூறியதுபோலவே, முதல் தவணையாக ரூ.2,000-ஐ ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தற்போது அடுத்த கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.
கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மக்களுக்கு அரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள 3.20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு திமுக சார்பில் தலா 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. முதல்வரின் நடவடிக்கையால், தற் போது பாதிப்பு பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை கொண் டுவர வேண்டும் என்றார்.
முன்னதாக, அரவக்குறிச்சி தொகுதி க.பரமத்தி, கிருஷ்ணராய புரம், குளித்தலை மணத்தட்டை ஆகிய இடங்களில் 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை உதய நிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிகளில், மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாம சுந்தரி, குளித்தலை இரா.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.