

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய பதிவு, புதுப்பித்தல், நல உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் மீது இந்த மாதத்துக்குள் நடவடிக்கை எடுத்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையரகத்தில் பணித்திறனாய்வு கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது. இதில், நல வாரியங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், நல உதவி கோரும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக இம்மாதத்துக்குள் நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களைவிரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த மே 20 வரை28 லட்சத்து 24 ஆயிரத்து 634 தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல் மற்றும் ஆதார் எண் இணைத்து உறுப்பினர்களாக உள்ளனர்.
இணையவழியில் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவு கேட்டு மனு பெறும்போது, அவ்வப்போது ஏற்படும் குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து தாமதமின்றி வழங்குமாறு அமைச்சர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.