சேலத்தில் சாலையோரம் நின்ற மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர்

சேலத்தில் இருந்து மேட்டூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் புறப்பட்டபோது, அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் காத்திருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சேலத்தில் இருந்து மேட்டூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் புறப்பட்டபோது, அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் காத்திருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
Updated on
1 min read

சேலத்தில் இருந்து நேற்று மேட்டூர் புறப்பட்ட முதல்வர் சாலையோரம் நின்ற பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நேற்று முன்தினம் சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கினார். நேற்று காலையில் மேட்டூருக்கு காரில் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

அப்போது, ஆய்வு மாளிகை வாசலில் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய முதல்வர் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து, அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் காத்திருந்த தூய்மைப் பணியாளர்களை பார்த்த முதல்வர் காரில் இருந்து இறங்கி அவர்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும், “கரோனா தடுப்பு காலத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள், கவனமாக பணிபுரிய வேண்டும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என முதல்வர் அறிவுறுத்தினார்.

இதேபோல, அழகாபுரம் பகுதியில் சாலையோரம் கோரிக்கை மனுவுடன் நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணை பார்த்த முதல்வர் காரில் இருந்து இறங்கி, அப்பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றார். பின்னர் அங்கிருந்து மேட்டூருக்கு புறப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in