Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

மீனவர்கள் நலன் காக்க ‘நீலம்’ திட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

‘‘விவசாயிகளுக்கு பசுமை திட்டம் போல், மீனவர்கள் நலன் காக்க நீலம் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்செந்தூர் அருகே அமலிநகர் மீனவர் கிராமத்தில் 8 மீனவர்களுக்கு தலா ரூ.1.34 லட்சம் மானியவிலையில் படகுகளுக்கு வெளிப் பொருத்தும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.

இயந்திரங்களை வழங்கி, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

விவசாயிகளுக்கு பசுமை திட்டம்இருப்பதுபோல, மீனவர்களைப் பாதுகாக்க நீலம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நெல்லுக்கு ஆதார விலை இருப்பது போல,மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கு ஆய்வு செய்து வருகிறோம்.மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையான மீன்வளத்துறையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி உட்பட அனைத்து மீனவர் கிராமங்களிலும் மீன்விற்பனைக் கூடம் தரம் உயர்த்தி அமைக்கப்படும். அந்தந்த கிராமங்களிலேயே படகுகளை கட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகுகள் வழங்கப்படும் என்ற விதிமுறையை மாற்றி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை படகுகளை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 6 மாதகாலத்துக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல சேவியர், உதவிஇயக்குநர் (மரைன்) விஜயராகவன், மீன்வளத்துறை இயக்குநர் (கடல்வளம்) வயோலா, கோட் டாட்சியர் தனப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x